அச்சுவேலி நாவலம்பதி காட்டுமலைக்க

அச்சுவேலி நாவலம்பதி காட்டுமலைக்கந்த சுவாமி கோயில் திருவூஞ்சல் பாமாலை

ப.சீனியர் சாது கேட்டுக்கொண்டதற்கிணங்க சங்கீத நாடக அசிரியரும் ஆயுள்வேத வைத்தியருமான
திரு ஆ.க.தம்பிமுத்து
அவர்களால் இயற்றப்பெற்றதுகாப்பு
சீராரும் பக்திரச வூஞ்சல்தனைச் செப்புதற்குப்
பேராளன் யானைமுகன் காப்பாமே - பார்போற்றப்
புக்குவத்தில் பக்குவமாய்ப் பாஸ்கரனாய் நின்றபொருள்
மெய்க்குருவாய்மேவலரசு.

துதி
ஆனைமுக னான சிவ ஞானக்கணபதியைப்
பேணிக் கதிர்காம வழிகாட்டு வேலன்மேல்
தானே திருவூஞ்சல் தாவிவரத் தமிழ்மொழியில்
கானக் கலைவாணி கருத்தாரக் கணித்திடுவாம்

பொதுத்துதி
சித்தி விநாயகன் சிவசக்தி மால் முருகன்
முத்திக்கதிர்காம வழிகாட்டு மாமுருகன்
சித்தமுறு சீனியற் கருள்செய்த முருகன்
தத்தித்தோ மெனமயில்மேற் தானாடிடுமுருகன்

முருகன் துதி
கூட்டு வினைவசங் கொண்டோர் கொடியகன்ம
ரோகம் நீக்குங்
காட்டுமலை வேலவனே கதிர்காம வழிகாட்டுங்
குலகுருவே
தேட்டமுடனடிபணியத் திருவுருவா யொலித்தவனே
நீட்டமுட னருள்புரிவாய் நிர்மலா னந்தமயம்
நிறைந்தவனே.

துதி
கதிர்காம வழிப்பதவி காட்டி நின்றாய்
கமலா சனற்றனைச் சிறையிலிட்டாய்
எதிரான சு10ரனுட லொடிய வைத்தாய்
இருளுலகோரிடர்தீர்த்து வொளிகொடுத்தாய்
மதிய10 டுரு கயிதம் மகிழ வைத்தாய்
மான்மழு வோடு மயில்மே லமர்ந்தாய்
கதி காட்டுங் கௌரிதருங் கார்த்தி கேயா
கருணையிரு நிதிஞானம் மோகஷம் தாராய்.

உருத்திர வயிரவன் உருத்திர நாயகி துதி
இராகம் : கந்தார்த்தம் தாளம் : ரூபகம்
உருத்திர வயிரவனே உன்னை உகந்து வேண்டினேனே
கருத்தில் காண் ருத்திர காரணியாள் கூடவே
பெருத்த பிரமன்சிரம் பிழை பேணியே கொய்தவனே
திருத்தமற்றிடினுந் தேவேபொறுத்தருள் வீரே

ஆதி வயிரவன் பத்திர காளி மேல் துதி
ஆதி வயிரவனே ஆனந்தத் தாண்டவனே
பாதிப் பத்திரகாளி பாகங்கொண்ட ரூபனே
சோதிசொ ரூபவானே சொர்க்கம் தில்லை யம்பலனே
நீதிசேர் மொழிகேட்டு அபயம் நன்கு ஈந்திடுவாய்

காளமாமுனி துதி
தாளம் : ஆதி
காள மாமுனி கருணை புரிவாய் கழலடியே சரணம்
வேள்வி முதலாய் விளங்கி நிற்கும் வீரனே சரணம்
சு10ளும் தொல்லை தீர்த்திடுவாயே சுவாமியே சரணம்
ஆளும் பிழைகள் யாவும் நீக்கிஅ ருள்வீரே சரணம்

வீரபத்திரர்
தாளம் : ரூபகம்
வீரபத்திரரே தேவா வந்தா ளிடுவீரே
தீராதக்கன் வேள்வி தனையே கெடுத்தவனே
பாரோர் போற்றும் மகா பரம காருண்யனே
நேரே தீவினையை நன்கு தீர்க்குந் தத்துவனே

அனுமார் மேல் துதி
தாளம் : ஆதி
மாருதியாய் அனுமாராய் மாநிலம் மருவினாய் பெரிது
தாரணி தனை யாண்ட ராமனின் து}தனாய் உருவாய்
காரும் எம்பிழை யாவும் நீக்கிக் கருணை யுருவுடையாய்
வீரியரே சிரஞ்சீவியாகிய வேதாந்த மணியே

நரசிம்ம வயிரவர்
தாளம் : ரூபகம்
பிரகலாதனன் பக்தி தன்னில் பதிதித்தாய்
கரண சுகிர்தமற்ற ரண்யனைக் கொன்றாய்
தருணம் அருள்வாய் தரும வித்வநாதா
சரணம் சரணம் சுவாமி யெமையாள்வாய்


கப்பல் பாட்டு
வர்ணமெட்டு
இராகம் : புன்னாகவராளி தாளம் : ஏகம்
கண்ணிகள்
ஊஞ்சலது ஆடிடுக
காட்டுமலை வேலவனார் - ஊஞ்

உருமைபுகழ் சபைதன்னில் உருத்திர வயிரவரும்
உத்தண்ட வுமைசத்தி உருத்திர நாயகியும்
தருணமவை தனினருகில் ஆதி வயிரவரும்
துதிபத்திர காளிநர சிம்ம வயிரவரும்
ஆடிடுவார் ஆடிடுவார்
ஆறுமுகனார் ஆடிடுவார்

பெருமாருதி அனுமார் காளமா முனியும்
பரனாரீஸ் பரனாரோ டையனார் கூடீ
பரயாளும் முமை முத்து மாரியதில் நீட
பேதமற வேவீர பத்திரர் கொண் டாட
ஆடிடுக வூஞ்சலது
முருகபிரான் ஆடிடுக

முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி
முனிநாற்பத் தெண்ணாயி ரம்பேர்கள் காண
சேப்பரிய நாரதரும் வீணைகானம் பாட
செந்தமிழ் அருணகிரி திருப்புகழ் நீட
ஆடிடுக அண்ணாமலை
ஆழ்பெருமான் ஆடிடுக

நந்தியந் தேவர்மத் தாளம் முழங்க
நான்முகன் வேதபா ராயணஞ் செய்க
குணபானு கம்பர் சங்க நாதங் கொழிக்க
குறுமுனிவர் நக்கீரர் தவநிலை யியற்ற
ஆடிடுக ஆடிடுக
பழனிவேலவர் ஆடிடுக

ஆடிடுக வூஞ்சலது ஆலயத்திலாட
ஆறுசாஸ் திரமாறு பிரிகளாய்க் கூட
தேடரிய நால்வேதம் கயிறா நீட
திருக்காட்டு வேலவனார் ஊஞ்சலது ஆட
ஆடிடுக காஞ்சிவடி
வேலவனார் ஆடிடுக

ஐந்தெழுத்தோர் பலகை யாகவே சேர
ஆதிகதிர் காமவடி வேலது துலங்க
சிந்துபா டிடும் அடியார் கீதம் முழங்க
ஜெயமங் களமேள வாத்தியந் தொனிக்க
ஆடிடுக திருச்செந்து}ர்
சிவசுப்ரம்மண்ய னு}ஞ்சலது

ஆடிவரு மயில் சேவல் அருகே வலமாக
ஆலோல வள்ளிதாம் பூலங் கொடுக்க
வேடுவர்கள் துதிசெய்து நெய்வேதிய மீய
வலமே தெய்வ யானையும் நலமாயமர
ஆடிடுக தணிகை மலை
சரவணனார் ஊஞ்சலது


கொடிய கன்ம ரோகமும் குணமாக நீங்க
குடிநாவ லம்பதியர் குலம் போற்றும் வீரா
புடியதனில் சாதிபேத மில்லாத முகனே
பழநிமலை காட்டுமலை யாய்வந்த முருகா
ஆடிடுக ஆடிடுக
அம்பிகை சேய் ஆடிடுக

வேதாந்த மணியேவே லாயுதப் பொருளே
விவேகியர் காணரிய நாதாந்தத் தொனியே
தேடரிய தீர்த்தம் சிருட்டித்த குருவே
தென்கயிலை காட்டுமலை யானின்ற வுருவே
ஆடிடுக ஊஞ்சலது
ஆனந்தரூப நாடிடுக

சரவணப் பொய்கைவளர் சண்முகப் பெருமான்
சமர் செய்த சு10ரனுடல் சிரங்கொய்த பெருமான்
கரண சுகிர்தங் கொண்டோர் கண்கண்ட பெருமான்
காசிரா மேஸ்வரங் காஞ்சி வெற்றியூர் பெருமான்
ஆடிடுக ஆடிடுக
அகிலபரன் ஆடிடுக

ஆறுமுகன் திருவடியைத் தேடியே அன்பர்
ஆனந்தக் காவடிகள் நாடியே வருக
நீடி அன்னதானம் பிரசாதம் துலங்க
நிஷ்கள நிர்மல நிராமய மிலங்க
ஆடிடுக ஆடிடுக
அன்பர்மாட்டு ஆடிடுக

கைவல்ய ஞான உப தேசபர குருவே
கமலா சனைச் சிறையில் வைத்திட்ட திருவே
மெய்வைத்த அடியாரை மேல் வைத்த வுருவே
மரணசென னப்பிணியை மாற்று சற் குருவே
ஆடிடுக வூஞசலது
ஆசைத்தேவா ஆடிடுக

ஆடிடுக ஆடிடுக வூஞசலது ஆட
அர்ச்சனையுங் கற்பூர தீபமது நீட
தேடரிய புஸ்பங்கள் மாரியாய் பொழிய
ஜெயசோதி தீபங்கள் தான் னின்றொலிக்க
ஆடிடுக ஊஞ்சலது
ஆறுமுகனார் ஆடிடுக

வெற்றிவடி வேலுடன் வீதிவலம் வந்து
பக்தியுடன் வேண்டுவோர் பாவங் கிளைந்து
தற்சொருப மாய்நின்று தீர்த்தமுஞ் சுரந்து
தற்காத்து ரக்ஷித்த குமர குரு சுவாமி
ஆடிடுக ஆடிடுக
தணிகைமுருகா ஆடிடுக

கூறுமடி யார்கள் வினை தீர்த்தருள் சுரந்து
குன்றுருவ வேல்வாங்கி நின்றபொரு ளன்று
நீறுருத்தி ராக்கமுடன் பஞ்சாட்சரங் கொண்டு
நின்றருள் மூவைந்து தினம் மஞ்ஞை மேல்நின்று
ஆடிடுக கார்ர்த்திகேயா
ஊஞ்சலது ஆடிடுக

கதிர்காமங் காட்டுமலை வேலவன் மேல் மங்களம்
கவிபாடு மணிமகன் வாழவே மங்களம்
துதிகூறுமடியார்கள் புலவர்க்கு மங்களம்
தொல்புவியில் யாவர்க்கும் மங்களம் மங்களம்
மங்களமேடாடிடுக
எங்குமருள் ஓங்கிடுக

அரசாங்க அதிபர்

 நாவலம்பதி காட்டுமலைக் கந்தனை குல தெய்வமாய்க் கொண்டு வாழும் அக்கிராம மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் அவனருள் நாடி வருகின்றனர். இயற்கைச் சூழலில் எழந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தனை கண்குளிரக் கண்டு கவலையெலாம் தீர்த்து மெய்யுருகப்பாடி மேன்மை பல பெறுவோம் என்று உலகெங்கணுமுள்ள கந்தன் அடியார்களை அன்போடழைக்கும் இணையத்தள நிகழ்வுகள் சிறந்து நிலைபெற அவனருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.

ஆதீன முதல்வர்

அச்சுவேலி காட்டு மலைப் பகுதியில் நீண்ட நாளாக எழுந்த ருளியிருந்து அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் திருவருளை அனைவருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளம் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ளும்; வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பக்தி நாட்டின் வெளிப்பாடாகிய இவ்வாலயம் பல ஆண்டுகளாக அச்சுவேலி பிரதேச மக்களின் வழிபாட்டிற்குரிய ஆலயமாகும். இவ் ஆலயம் செயற்படுவது வரவேற்கத்தக்கது

பிரதேச செயலர்

இப்பதியில் காணப்படும் புனிதமான குண்டு ஒன்று எப்போதும் நீர் சுரந்து கொண்டிருப்பது போல முருகனின் அருளும் எப்போதும் பக்தர்கள் மேல் சொரிந்து கொண்டிருக்கிறது. அக்குண்டில் உள்ள நீரில் திரி தோய்க்கப்பட்டு கொடியேற்றத்திலிருந்து திருவிழா முடியும் வரை அத்தீர்த்தத்திலேயே விளக்கு எரிக்கப்பட்டது. காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தையே காட்டுகிறது. இத்தகைய பெருமைகள் சேர்ந்த காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம் வந்து அனைவருக்கும் அருள் சொரிய கந்தனைப் பிரார்த்திப்பதோடு இதற்கு முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

இணையத்தள ஆசிரியர்

வேண்டியவருக்கு வேண்டியவை அருளி நாவலம்பதியிலே அருளாட்சி புரியும் எங்கள் காட்டுமலைக்கந்தனின் புகழினைப்பரப்புவதில் இது ஒரு கன்னி முயற்சி உலகமெல்லாம் பரந்துள்ள காட்டுமலைக்ந்தனின் அடியார்கள் இவ்விணையத்தளத்தின் மூலம் காட்டுமலையில் நடப்பனவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்வார்கள் என்பதில் வேறுகருத்துக்கு இடமில்லை.
 
 

காப்புரிமையாவும் ©காட்டுமலைக்கந்தன் ஆலயத்திற்குரியது.2009 | Site Design By Speed IT net