New Page 1

அச்சுவேலி நாவலம்பதி, காட்டுமலைக் கந்தசுவாமி கோவில் பிரதமகுரு திரு.சீ.சிவகுரு அவர்களின் வாழ்க்கை வரலாறு


அச்சுவேலி நாவற்காடு எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ப.சீனியன் - இளையபிள்ளை தம்பதிகளுக்கு இரண்டாவது பிள்ளையாக ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து நான்காம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாள் (24.09.1924) அருள்செல்வர் சீ.சிவகுரு அவர்கள் பிறந்தார். இவருக்கு மூத்த சகோதரமாக வள்ளிப்பிள்ளையும் (தங்கம்), இளைய சகோதரர்களாக குமரகுரு, திருத்தங்கம் விளங்கினர். காட்டுமலைக் கந்தசுவாமி கோவில் முகாமையாளரும் பூசகருமாகிய ப.சீனியன் அவர்களாலேயே ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டு கோவில் கட்டப்பட்டது. தமிழ்வேதமாகிய தேவார திருவாசகங்களை மந்திரங்களாகக் கொண்டு பூசை செய்து வந்த சீனியரது அன்புமகன் சிவகுரு யாழ். சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டார்.

சோதிடம் கற்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளவராக இருந்தமையால் அச்சுவேலி ஆறுமுகம் என்பவரிடம் மரபுவழிக்கல்வியூடாக சோதிடக்கல்வியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை துறைசார்ந்த அறிவுள்ள பெரியோர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றார். கற்ற அறிவும் அனுபவப்பட்ட அறிவும் ஒன்றாகச் சேர்ந்து சோதிடத்தில் திறமைமிக்கவராக விளங்கினார். சிறந்த முருக பக்தராக விளங்கிய இவருக்கு அச்சுவேலி தம்பன் சின்னம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வி சோதி என்பவரைப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்ற வள்ளுவர் பெருந்தகையின் வாக்கிற்கமைய இல்லறத்தையே நல்லறமாக்கிக் கொண்டு தமது இல்வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொண்டார். சிவகுரு சோதி தம்பதிகளுக்கு சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் (சீனியன்) என்னும் ஆண் பிள்ளைகளும் செல்வரத்தினம், தங்கரத்தினம் என்னும் பெண் பிள்ளைகளும் உண்டு. இவர்களுக்கு பேரப்பிள்ளைகளுமுளர்.ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தொன்பதாம் வருடம் தந்தையார் சிவபதமடைந்தார். தந்தைக்குப் பின் கோவில் பரிபாலனத்தையும் நித்திய பூசைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்;டார். இத்தொண்டுகளில் சகோதரர் சீ.குமரகுருவும் சேர்ந்து செயற்பட்டார். முன்னரே ப.சீனியன் அவர்களால் கைக்கொள்ளப்பட்ட கற்பிக்கப்பட்ட பூசைமுறைகளை இருவரும் சிறப்பாகப் பேணி வந்தனர். தந்தையாரால் கட்டப்பட்டு முடிக்கப்படாதிருந்த திருப்பணி வேலைகள் பலவற்றைத் திருத்தமாகவும் அழகாகவும் செய்து முடித்தார்கள். குறிப்பாக அறுபதுகளிலே (1960) கோவிலைப் புனரமைப்புச் செய்து அழகு மிக்க திருத்தலமாக காட்டுமலைக்கந்தசுவாமி கோவிலை நிர்மாணித்த பெருமை சீ.சிவபுருவிற்கே உரியதாகும்.

இளமை தொடங்கிய சமயாசாரமும் முருக பக்தியும் இவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தன. கற்றதனாலாய பயன் கடவுள் வழிபாடே என்பதை உணர்ந்து வாழ்ந்து வருகின்றார். இவரிடம் இக்கின்ற ஆன்மீகச் சிறப்புகள் காரணமாக யாவரும் இவரிடம் மதிப்பு வைத்து ஒழுகினார்கள். இறைவனது அருளாளனது பக்குவப்பட்ட தெய்வீகம் மிக்கவர்கள் வாயிலாக வெளியுலகத்துக்குத் தெரிகின்றது. தெய்வத்தோடு வைத்து ஒப்ப எண்ணத்தக்க பெருமையும் புகழும் தெய்வீகம் மிக்கவர்களுக்கு உண்டு.பெரியவர்கள் வரிசையிலே வைக்கத்தக்க பெருமதிப்பு மிக்கவராக சிவகுரு விளங்குகிறார்.

அன்பர்பணி செய்யவென ஆளாக்கி விட்டால்
இன்ப நிலைதானே வந்தெய்தும் பராபரமே

அருள்வள்ளலாகிய முருகப்பெருமான் கோவில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற காட்டுமலையில் தனது பணிகளை விரிவாக்கினார். அவரது பணிகள் அற்புதமானது. திருவருட்சக்தி மிக்கது. யாழ் குடாநாட்டில் பிரபலமான முருகன் ஆலயமாக காட்டுமலைக் கந்தசுவாமி கோவில் சிறப்புப் பெற்றமைக்கு அருட்செல்வர் சிவகுருவின் அயராத திருத்தொண்டே காரணமாகும். ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தியோராம் ஆண்ட (1971) புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இக்காலகட்டத்தில் சித்திரத்தேர் செய்தல் என்பது இலகவான காரியமல்ல. கந்தவேளின் திருவருள் வாக்குகளை டிபற்று அற்புதமாக சித்திரத்தேர் திருப்பணியை நிறைவேற்றினார். தொடர்ந்து ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தியாறாம் ஆண்டு (1986) அழகிய திருமஞ்சத் திருப்பணியையும் பூரணப்படுத்தினார். காட்டுமலைக் கந்தசுவாமிகோவில் திருப்பணிகள் செம்மையாகப் பூர்த்தியாவதற்கு நாவலம்பதி வாழ் மக்களின் ஒத்துழைப்பையும் உதவிகளையும் தமது ஆளுமையால் பெற்றுக்கொண்டார். மக்களைச் சிவப்பணியோடு ஒன்றிணையச் செய்தார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணு}ற்றியேழாம் ஆண்டு தற்போது பொலிவுற்று விளங்கும் ஆலயத்தை அமைக்கும் திருத்தொண்டினை ஆரம்பித்தார். இப்புனரமைப்புப் பணி சிறப்பாக நடைபெற்று முடிக்கப்பெற்றது. புதிய மணிக்கோபுரம் உட்பட திட்டமிடப்பட்ட அனைத்துத் திருப்பணிகளும் சிவகுரு ஐயா காலத்தில் சிறப்பாகப் பூரணப்படுத்தப் பெற்றது.ஒழுக்க சீலமிக்க சிவகுருஐயா அவர்கள் சமய புராண நு}ல்களை நன்றாகக் கற்றுக்கொண்டார். குறிப்பாகக் கந்புராணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கந்தன் பெருமை பேசுவதிலேயே பொழுதைப் போக்குவதில் விருப்பமுள்ளவர். பக்திநெறியைக் கிராமத்து மக்கள் மத்திக்கு எடுத்துச் சென்றவர். மக்களின் மனங்களைத் தனது து}ய்மையான இறைபணியால் கவர்ந்தவர். நாவலம்பதியின் முதன்மை வாய்ந்த பிதாமகன். மக்கள் எல்லோராலும் ஐயா என் அன்போடு அன்பாக அழைக்கப்படுபவர். அவர் நித்திய பூசைகளில் ஈ,டுபடுவதைக்கண்டு தரிசிப்பதற்கும் வீபூதிப் பிரசாதம் பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் முன்னிற்பர். தீராத நோயை;களைக் கூட காட்டுமலைக் கந்தவேளின் திருநீற்றின் மூலம் தீர்த்து வைப்பார். தெய்வீகச் சிறப்பு மிக்க சிவதொண்டன். எவ்வகையான சந்தர்ப்பமானாலும் ஆலயச் சூழலை விட்டு விலகிச் செல்லமாட்டார். வலிகாமத்தை விட்டு இடம்பெயரவேண்டி வந்த காலம் அவரது மனதுக்கு மிகுந்த வேதனையைத் தந்த காலமாகும். ஒவ்வொரு நிமிடமும் முருகனைப் பற்றியும் ஆலயத் திருப்பணிகள் பற்றி சிந்தித்துக் கொண்டேயிருப்பார்.

முறைசாராத ஆலயங்கள் இலங்கையில் பலவுண்டு. அவற்றுள் காட்டுமலையும் ஒன்றாகும். இத்திருத்தலத்தை செம்மையாக நிர்வகித்தவர். காட்டுமலையில் இருபத்தைந்து திருவிழாக்கள். கொடியேற்றம் என்றால் ஊர் முழுவதும் பக்திமயம். கோலாகலமான மனமகிழ்ச்சி இந்த உணர்வுபூர்வமான பக்திநெறியைச் சிறப்புடன் இக்கிராமத்தில் வளர்த்தெடுத்த பெருமை சீ.சிவகுரு அவர்களுக்கேயுரியது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு காட்டுமலைக் கந்தவேளின் மணியோசை கேட்கும். கந்த வேளின் நாமம் ஊர் மக்கள் நாக்களில் தவழும். மேற்கூறிய பணிகள் யாவும் சிறப்புப் பெற்று விளங்குவதற்குக் காரணமானவர்.

இவ்வாறாக சைவப்பணிகளுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து அருட்செல்வர் சீ.சிவகுரு அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு வகையில் விரிவடைந்து செல்கிறது. அவரது பணியைப் பாராட்டும் முகமாக அச்சுவேலி நாவலம்பதி வாழ்மக்கள் அவரது பவள விழாவினை சிறப்புற எடுத்துப் பாராட்டி மகிழ்ந்தனர். இவ்வண்ணம் சிவப்பணியாற்றி வரும் காலத்தில் 2004.06.15 ம் திகதி கார்த்திகை நன்னாளில் இறைவனடி சேர்ந்தார்.

திரு.சி.சிவலிங்கம்(B.A, Dip. in Ed)
பிரதி அதிபர்
யாழ். கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரி. 

அரசாங்க அதிபர்

 நாவலம்பதி காட்டுமலைக் கந்தனை குல தெய்வமாய்க் கொண்டு வாழும் அக்கிராம மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் அவனருள் நாடி வருகின்றனர். இயற்கைச் சூழலில் எழந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தனை கண்குளிரக் கண்டு கவலையெலாம் தீர்த்து மெய்யுருகப்பாடி மேன்மை பல பெறுவோம் என்று உலகெங்கணுமுள்ள கந்தன் அடியார்களை அன்போடழைக்கும் இணையத்தள நிகழ்வுகள் சிறந்து நிலைபெற அவனருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.

ஆதீன முதல்வர்

அச்சுவேலி காட்டு மலைப் பகுதியில் நீண்ட நாளாக எழுந்த ருளியிருந்து அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் திருவருளை அனைவருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளம் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ளும்; வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பக்தி நாட்டின் வெளிப்பாடாகிய இவ்வாலயம் பல ஆண்டுகளாக அச்சுவேலி பிரதேச மக்களின் வழிபாட்டிற்குரிய ஆலயமாகும். இவ் ஆலயம் செயற்படுவது வரவேற்கத்தக்கது

பிரதேச செயலர்

இப்பதியில் காணப்படும் புனிதமான குண்டு ஒன்று எப்போதும் நீர் சுரந்து கொண்டிருப்பது போல முருகனின் அருளும் எப்போதும் பக்தர்கள் மேல் சொரிந்து கொண்டிருக்கிறது. அக்குண்டில் உள்ள நீரில் திரி தோய்க்கப்பட்டு கொடியேற்றத்திலிருந்து திருவிழா முடியும் வரை அத்தீர்த்தத்திலேயே விளக்கு எரிக்கப்பட்டது. காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தையே காட்டுகிறது. இத்தகைய பெருமைகள் சேர்ந்த காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம் வந்து அனைவருக்கும் அருள் சொரிய கந்தனைப் பிரார்த்திப்பதோடு இதற்கு முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

இணையத்தள ஆசிரியர்

வேண்டியவருக்கு வேண்டியவை அருளி நாவலம்பதியிலே அருளாட்சி புரியும் எங்கள் காட்டுமலைக்கந்தனின் புகழினைப்பரப்புவதில் இது ஒரு கன்னி முயற்சி உலகமெல்லாம் பரந்துள்ள காட்டுமலைக்ந்தனின் அடியார்கள் இவ்விணையத்தளத்தின் மூலம் காட்டுமலையில் நடப்பனவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்வார்கள் என்பதில் வேறுகருத்துக்கு இடமில்லை.
 
 

காப்புரிமையாவும் ©காட்டுமலைக்கந்தன் ஆலயத்திற்குரியது.2009 | Site Design By Speed IT net