|
Page Not Available yet
Page Not Available yet.
Visit Later
பக்கம் இன்னும்
வடிவமைக்கப்படவில்லை
|
ஆசிச்செய்திகள் |
அரசாங்க
அதிபர் |
நாவலம்பதி
காட்டுமலைக் கந்தனை குல தெய்வமாய்க் கொண்டு வாழும் அக்கிராம
மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் அவனருள் நாடி வருகின்றனர்.
இயற்கைச் சூழலில் எழந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தனை கண்குளிரக்
கண்டு கவலையெலாம் தீர்த்து மெய்யுருகப்பாடி மேன்மை பல பெறுவோம்
என்று உலகெங்கணுமுள்ள கந்தன் அடியார்களை அன்போடழைக்கும்
இணையத்தள நிகழ்வுகள் சிறந்து நிலைபெற அவனருள் வேண்டி
வாழ்த்துகின்றேன். |
ஆதீன
முதல்வர் |
அச்சுவேலி
காட்டு மலைப் பகுதியில் நீண்ட நாளாக எழுந்த ருளியிருந்து
அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் திருவருளை அனைவருக்கும்
பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளம் மூலமாக அனைவரும் அறிந்து
கொள்ளும்; வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செய்தி அனைவருக்கும்
மகிழ்ச்சியைத் தருகின்றது. பக்தி நாட்டின் வெளிப்பாடாகிய
இவ்வாலயம் பல ஆண்டுகளாக அச்சுவேலி பிரதேச மக்களின்
வழிபாட்டிற்குரிய ஆலயமாகும். இவ் ஆலயம் செயற்படுவது
வரவேற்கத்தக்கது |
பிரதேச
செயலர் |
இப்பதியில்
காணப்படும் புனிதமான குண்டு ஒன்று எப்போதும் நீர் சுரந்து
கொண்டிருப்பது போல முருகனின் அருளும் எப்போதும் பக்தர்கள் மேல்
சொரிந்து கொண்டிருக்கிறது. அக்குண்டில் உள்ள நீரில் திரி
தோய்க்கப்பட்டு கொடியேற்றத்திலிருந்து திருவிழா முடியும் வரை
அத்தீர்த்தத்திலேயே விளக்கு எரிக்கப்பட்டது. காட்டுமலைக்
கந்தனின் அருட்திறத்தையே காட்டுகிறது. இத்தகைய பெருமைகள்
சேர்ந்த காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம் வந்து
அனைவருக்கும் அருள் சொரிய கந்தனைப் பிரார்த்திப்பதோடு இதற்கு
முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
|
இணையத்தள
ஆசிரியர் |
வேண்டியவருக்கு
வேண்டியவை அருளி நாவலம்பதியிலே அருளாட்சி புரியும் எங்கள்
காட்டுமலைக்கந்தனின் புகழினைப்பரப்புவதில் இது ஒரு கன்னி
முயற்சி உலகமெல்லாம் பரந்துள்ள காட்டுமலைக்ந்தனின் அடியார்கள்
இவ்விணையத்தளத்தின் மூலம் காட்டுமலையில் நடப்பனவற்றை
உடனுக்குடன் அறிந்துகொள்வார்கள் என்பதில் வேறுகருத்துக்கு
இடமில்லை. |
|
|
|