செய்தித்துளிகள்
சித்தரைத் திங்கள்
1 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 14.04.2009
வருஷப்பிறப்பு உற்சவம் அதிகாலை 5.00 மணி
சகஸ்ர மகா சங்காபிஷேகம் காலை 10.00 மணி
பொங்கல் காலை 10.00 மணி
தண்டிகை உற்சவம் இரவு 7.00 மணி
13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 20.04.2009 கார்த்திகை உற்சவம் இரவு 7.00 மணி
25 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 08.05.2009
தெண்டாயுதபாணி உற்சவம் பகல் 10.00 மணி
திருக்குளிர்த்தி நண் பகல் 12.00 மணி
வைகாசித்திங்கள்
1 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 15.05.2009 விசேடபூசை காலை 5.00 மணிக்கு
10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 24.05.2009 கார்த்திகை உற்சவம்
15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 29.05.2009 கொடியேற்றம் பகல் 10.00 மணி
19 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 02.06.2009 உருத்திரநாயகி உற்சவம் இரவு 7.00 மணி
22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 05.06.2009 வைகாசி விசாக உற்சவம்
24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 07.06.2009 மஞ்ச உற்சவம் இரவு 7.00 மணி
29ஆம் நாள் வெள்ளிக்கிழமை 12.06.2009 அமிர்தவல்லி சுந்தரவல்லி உற்சவம் இரவு 7.00 மணி
ஆனித்திங்கள்
1 ஆம் நாள் திங்கட்கிழமை 15.06.2009 விசேடபூசை காலை 5.00 மணிக்கு
2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 16.06.2009 தெண்டாயுதபாணி உற்சவம் பகல் 10.00 மணி (மாம்பழத்திருவிழா)
4 ஆம் நாள் வியாழக்கிழமை 18.06.2009 கைலாசவாகன உற்சவம் இரவு 7.00 மணி
6 ஆம் நாள் சனிக்கிழமை 20.06.2009 கார்த்திகை உற்சவம் பகல் 12.00 மணி குருபூசை (சிவகுரு ஐயர்) மாலை 5.00 மணி
சப்பறத்திருவிழா இரவு 7.00 மணி
7 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 21.06.2009 இரதோற்சவம் காலை 10.00 மணி
சங்காபிஷேகம் 2.00 மணி
8 ஆம் நாள் திங்கட்கிழமை 22.06.2009 தீர்தோற்சவம் காலை 10.00 மணி
9 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 23.06.2009 பூங்காவன உற்சவம் மாலை 5.00 மணி
10 ஆம் நாள் புதன்;கிழமை 24.06.2009 வைரவர் உற்சவம் இரவு 7.00 மணி
ஆடித்திங்கள்
1 ஆம் நாள் திங்கட்கிழமை 17.07.2009 விசேடபூசை காலை 5.00 மணி
7 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 23.08.2009 விநாயகர் சதுர்த்தி உற்சவம் இரவு 7.00 மணி
25 ஆம் நாள் வியாழக்கிழமை 10.09.2009 கார்த்திகை உற்சவம் இரவு 7.00 மணி
புரட்டாதித்திங்கள்
1 ஆம் நாள் வியாழக்கிழமை 17.09.2009 விசேடபூசை காலை 5.00 மணி
3 ஆம் நாள் சனிக்கிழமை 19.09.2009 நவராத்திரி ஆரம்பம் பகல் 12.00 மணி
12 ஆம் நாள் திங்கட்கிழமை 28.09.2009 மானம்பு உற்சவம் பகல் 12.00 மணி
21 ஆம் நாள் புதன்;கிழமை 07.10.2009 கார்த்திகை உற்சவம் இரவு 7.00 மணி
31 ஆம் நாள் சனிக்கிழமை 17.10.2009 புரட்டாதிச்சனி விசேடபூசை பகல் 12.00 மணி
ஐப்பசித்திங்கள்
1 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 18.10.2009 விசேடபூசை காலை 5.00 மணி
2 ஆம் நாள் திங்கட்கிழமை 19.10.2009 ஸ்கந்தசஷ;டி விரதாரம்பம் மாலை 4.00 மணி
6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 23.10.2009 ஐப்பசி வெள்ளி விசேடபூசை பகல் 12.00 மணி
7 ஆம் நாள் சனிக்கிழமை 24.10.2009 சூரசங்காரம் மாலை 4.00 மணி
8 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 25.10.2009 திருக்கல்யாணம் மாலை 7.00 மணி
13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 30.10.2009 ஐப்பசி வெள்ளி விசேடபூசை பகல் 12.00 மணி
18 ஆம் நாள் புதன்;கிழமை 04.11.2009 கார்த்திகை உற்சவம் இரவு 7.00 மணி
20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 06.11.2009 ஐப்பசி வெள்ளி விசேடபூசை பகல் 12.00 மணி
27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 13.11.2009 ஐப்பசி வெள்ளி விசேடபூசை பகல் 12.00 மணி
கார்த்திகைத்திங்கள்
1 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 17.11.2009 விசேடபூசை காலை 5.00 மணி
15 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 01.12.2009 கார்த்திகை திருவிழா இரவு 7.00 மணி
மார்கழித்திங்கள்
1 ஆம் நாள் புதன்;கிழமை 16.12.2009 விசேடபூசை காலை 5.00 மணி
8 ஆம் நாள் புதன்;கிழமை 23.12.2009 உதயத்தின் முன் திருவெம்பாவைபூசை காலை 5.00 மணி
13 ஆம் நாள் திங்கட்கிழமை 28.12.2009 கார்த்திகை உற்சவம் இரவு 7.00 மணி
17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 01.01.2010 திருவாதிரை உற்சவம் காலை 5.00 மணி
24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 08.01.2010 விசேடபூசை காலை 5.00 மணி
தைத்திங்கள்
1 ஆம் நாள் வியாழக்கிழமை 14.01.2010 விசேடபூசை காலை 5.00 மணி
12 ஆம் நாள் திங்கட்கிழமை 25.01.2010 கார்த்திகை உற்சவம் இரவு 7.00 மணி
17 ஆம் நாள் சனிக்கிழமை 30.01.2010 தைப்பூசத்திருவிழா மஞ்சம் இரவு 7.00 மணி
மாசித்திங்கள்
1 ஆம் நாள் சனிக்கிழமை 13.02.2010 விசேடபூசை காலை 5.00 மணி
9 ஆம் நாள் திங்கட்கிழமை 25.01.2010 கார்த்திகை உற்சவம் இரவு 7.00 மணி
பங்குனித்திங்கள்
1 ஆம் நாள் திங்கட்கிழமை 15.03.2010 விசேடபூசை காலை 5.00 மணி
6ஆம் நாள் சனிக்கிழமை 20.03.2010 கார்த்திகை உற்சவம் இரவு 7.00 மணி

அரசாங்க அதிபர்

 நாவலம்பதி காட்டுமலைக் கந்தனை குல தெய்வமாய்க் கொண்டு வாழும் அக்கிராம மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் அவனருள் நாடி வருகின்றனர். இயற்கைச் சூழலில் எழந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தனை கண்குளிரக் கண்டு கவலையெலாம் தீர்த்து மெய்யுருகப்பாடி மேன்மை பல பெறுவோம் என்று உலகெங்கணுமுள்ள கந்தன் அடியார்களை அன்போடழைக்கும் இணையத்தள நிகழ்வுகள் சிறந்து நிலைபெற அவனருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.

ஆதீன முதல்வர்

அச்சுவேலி காட்டு மலைப் பகுதியில் நீண்ட நாளாக எழுந்த ருளியிருந்து அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் திருவருளை அனைவருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளம் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ளும்; வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பக்தி நாட்டின் வெளிப்பாடாகிய இவ்வாலயம் பல ஆண்டுகளாக அச்சுவேலி பிரதேச மக்களின் வழிபாட்டிற்குரிய ஆலயமாகும். இவ் ஆலயம் செயற்படுவது வரவேற்கத்தக்கது

பிரதேச செயலர்

இப்பதியில் காணப்படும் புனிதமான குண்டு ஒன்று எப்போதும் நீர் சுரந்து கொண்டிருப்பது போல முருகனின் அருளும் எப்போதும் பக்தர்கள் மேல் சொரிந்து கொண்டிருக்கிறது. அக்குண்டில் உள்ள நீரில் திரி தோய்க்கப்பட்டு கொடியேற்றத்திலிருந்து திருவிழா முடியும் வரை அத்தீர்த்தத்திலேயே விளக்கு எரிக்கப்பட்டது. காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தையே காட்டுகிறது. இத்தகைய பெருமைகள் சேர்ந்த காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம் வந்து அனைவருக்கும் அருள் சொரிய கந்தனைப் பிரார்த்திப்பதோடு இதற்கு முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

இணையத்தள ஆசிரியர்

வேண்டியவருக்கு வேண்டியவை அருளி நாவலம்பதியிலே அருளாட்சி புரியும் எங்கள் காட்டுமலைக்கந்தனின் புகழினைப்பரப்புவதில் இது ஒரு கன்னி முயற்சி உலகமெல்லாம் பரந்துள்ள காட்டுமலைக்ந்தனின் அடியார்கள் இவ்விணையத்தளத்தின் மூலம் காட்டுமலையில் நடப்பனவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்வார்கள் என்பதில் வேறுகருத்துக்கு இடமில்லை.
 
 

காப்புரிமையாவும் ©காட்டுமலைக்கந்தன் ஆலயத்திற்குரியது.2009 | Site Design By Speed IT net